• All
  • Why not Congress ?
gravatar

ஏன் களையெடுக்கனும்?

1.ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை கண்டிக்காமல் முழு ஆதரவு நல்கியது. விடுதலைப் புலிகள் போன்றவற்றில் பல்வேறு வகையான கருத்து வேறுபாடுகள் இருந்த்தாலும் பொதுமக்கள் கொத்துகொத்தாய் சாவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது நடுவண் அரசாகிய காங்கிரசு. இனப்படுகொலை நடத்திய ராஜபக்சேயை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல், மாறாக காமன்வெல்த் போட்டியின் போது சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்து உலகம் பார்க்கும் குற்றவாளியை நம் உணர்வை மதியாது போற்றியதற்கு தகுந்த பாடம் இந்தத் தேர்தல் தான்..



2.தமிழக மீனவர்கள் பிரச்சனை .. ஏறக்குறைய‌ 540 மீனவர்கள் உயிரை இலங்கைக் கடற்படை எடுத்துவிட்டது, இன்றுவரை இதற்கான நிரந்தரத் தீர்வை நடுவண் அரசு வைக்கவில்லை. இந்தத் தேர்தலில் காங்கிரசை களைந்தெடுக்கும் நிலையில் அடுத்த தடவை நமது பிரச்சனைக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்த்த நமது ஓட்டை பயன்படுத்துவது நமது கடமை.

3.காவிரி நதி நீர் பிரச்சனை - கர்நாடகத்து எதிராக நடுவண் அரசு நடவடிக்கை எடுத்தால் ஒரு சீட்டு என்ன ஒரு ஓட்டு கூட பெற முடியாது என்பதை அறிந்து தமிழக நலை காற்றில் பறக்கவிட்டு விட்டு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. திராவிடக் கட்சிகளுடன் கூட்டு போட்டு ஓட்டை வாங்கி விடுவதாலும், நாமும் ஓட்டை போட்டு விடுவதாலும் நம்மைப் புறக்கணிக்கிறது. ஆக, இந்தத் தேர்தல் களையெடுத்து காங்கிரசை காயபபடுத்தினால் காவிரி வரும்.

4.முல்லை பெரியாறு பிரச்சனை .. மகா மோசமாகவும் மெத்தனமாகவும் செயல்படுகிறது. ஜால்ரா அடிக்கும் தமிழக காங்கிரசு தலைவர்களால் ஒரு பிரையோசனமும் இன்றி கவனிப்பாரற்று உள்ளது. இதற்கும் காரணம் நடுவண் அரசு, ஆக உணர்த்தும் உரக்க நமது ஓட்டை காங்கிரசுக்கு அளியாதிருந்து.

5.பாலாறு பிரச்சனை

6.விலைவாசி ஏற்றம் - கட்டிலடங்கா வகையில் விண்ணை முட்டும் வகையில் ஏறிக்கொண்டிருக்கு விலைவாசி.. அதனைக் கட்டுக்குள் கொண்டு வர வகை செய்யாமல் கூட்டணி தர்மத்தைக் கட்டிக் காக்க சதா யோசனையிலும், சோதனையிலும் இருக்கும் காங்கிரசைக் களையெடுப்போம்.

7.ஸ்பெக்ட்ரம் ஊழல் - சொல்லவே வேண்டாம்.. கிட்டத்தட்ட 1.76 லட்சம் கோடி ஊழல்.. இதில் எத்தனை சைபர் உள்ளது எனப் போட்டுப் பார்த்தால் தான் தெரியும். ஊழல் நடந்து மூன்று ஆண்டுகளாய் ஒன்றும் நடக்கவில்லை என பறைசாற்றிய காங்கிரசு, உச்சநீதிமன்றம் தலையிடாவிடில் அதனையும் கூட்டணி தர்மத்தில் மறந்து, மறைத்திருகும்.. திமுக வுக்கும் சேர்த்து பாடம் கற்பிக்க வேண்டிய சூழலும் இதில் உள்ளதை நீங்கள் கவனிப்பீர்களாக..

8. பெட்ரோல் விலை.. மாதம் இரண்டு முறை.. வருடம் 24 முறை என ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல் விலை..

9.ஊழல் - காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம்.. என எண்ணற்ற கொடுமைகளுக்கு பாடம் புகட்ட..

உறுதி ஏற்போம்... காங்கிரசைக் களைந்தெடுப்போம் .. !

இலட்சியம் 234 .... நிச்சயம் 63 என உறுதி கொண்டு காங்கிரசையும், அதன் கூட்டணிக்கும் தக்க பாடம் புகட்ட உறுதி ஏற்போம் .. !